Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் சுரங்க வெடி விபத்தில், 33 பேர் பலி'யானதாகத் தகவல்

உக்ரைன் சுரங்க வெடி விபத்தில், 33 பேர் பலி'யானதாகத் தகவல்
, வியாழன், 5 மார்ச் 2015 (05:34 IST)
கலகக்காரர்களின் பிடியில் உள்ள கிழக்கு உக்ரைனில், ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயுவினால் ஏற்பட்ட விபத்தில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கலகப் படையைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 


ஜாஸியாட்கோ என்ற இந்தச் சுரங்கத்தில்தான் இதற்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
 
உக்ரைனில் ஏற்பட்ட சுரங்க விபத்துகளிலேயே மிக மோசமான விபத்தாக அந்த விபத்து கருதப்பட்டது.
 
சுரங்கத்தில் பணியாற்றுபவர்களின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் குவிந்துள்ளனர்.
 
மீட்புப் பணிகளில் ஈடுபடக்கூடிய அளவுக்கு கலகக்காரர்களிடம் கருவிகள், எந்திரங்கள் இருக்கிறதா என்ற கவலையும் எழுந்துள்ளது.
 
குளிர்காலம் முழுக்கவே டோனெட்ஸ்க்கில் பிரிவினைவாத கலகக்காரர்களுக்கும் அரசுப் படையினருக்கும் கடுமையாக சண்டை நடைபெற்றுவந்தது.
 
ஆனால், சமீப காலமாக சுரங்கம் அமைந்திருக்கும் பகுதியில் சண்டைகள் நடக்கவில்லையென சுரங்கத் தொழிலாளர்கள் யூனியனைச் சேர்ந்த மிகைல் வோலிநெட்ஸ் தெரிவித்திருக்கிறார்.
 
ஏப்ரல் மாதத்தில் இந்த சண்டை துவங்கியதிலிருந்தே உக்ரைனின் பொருளாதாரம் கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. இருந்தபோதும், போர் நடக்கும் இடங்களிலும்கூட, நிலக்கரிச் சுரங்கங்கள் தொடர்ந்து இயங்கிவந்தன.
 
சுரங்கத்தில் வெடிப்பு நிகழ்ந்தபோது 230 பேர் பணியாற்றிவந்ததாகத் தெரிகிறது.
இவர்களில் 157 பேர் உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் வெளியில் கொண்டுவரப்பட்டுவிட்டனர்.
 
உக்ரைனில் இருக்கும் மிகப் பெரிய சுரங்கங்களில் இந்த ஜாஸியாட்கோ சுரங்கமும் ஒன்று.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil