Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பாரத ரத்னா" விருதைப் பெற்றார் சச்சின்

, செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (14:45 IST)
இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய விஞ்ஞானி பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இன்று இந்தியா வழங்கும் மிக உயர் சிவிலியன் விருதான 'பாரத ரத்னா' விருதைப் பெற்றுக்கொண்டனர்.
FILE

டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த ஒரு வைபவத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இந்த விருதுகளை இருவருக்கும் வழங்கினார்.

பாரத ரத்னா விருது இதற்கு முன்னர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அன்னை தெரெசா, நெல்சன் மண்டேலா, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது பிரதமரின் பரிந்துரையில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் கடந்த நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

664 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின், 34,357 ஓட்டங்களை எடுத்திருக்கிறார். 100 சதங்களை அடித்திருக்கிறார். மொத்தம் 24 ஆண்டுகள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். உலகக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சச்சின். 2012ம் ஆண்டில் சச்சின் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil