Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மேஷம்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (13:11 IST)
மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்) - செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
கிரகநிலை: குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - ராகு சுக ஸ்தானத்திலும் - சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் - கேது தொழில்  ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 
 
கிரகமாற்றம்: 13.02.2019 அன்று ராகு பகவான் தைரியவீர்ய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் பாக்கியஸ்தானத்திகும் மாறுகிறார்கள். 23.11.2019 அன்று குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
இந்த வருடத்தில் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத்  தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.
 
குடும்பம்: குடும்பத்தில் நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களின் தன்மையை உணர்ந்து  பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். நட்பில் புதியவர்களின் தொடர்பு  ஏற்படும்.
 
பொருளாதாரம்: வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள்  அனைத்தும் வெற்றி வாகை சூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின்  கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள்.
 
ஆரோக்கியம்: உடல் ஆரோக்யம் சிறப்படையும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகளிலிருந்து தப்புவீர்கள். மனம் சம்பந்தமான  பிரச்சனைகள் அனைத்தும் விலகும். மாற்று மருத்துவத்தின் மூலம் அனுக்கூலம் பெறுவீர்கள்.
 
பெண்கள்: பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு  சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும்  பேசும் நேரத்தில் நிதானம் தேவை.
 
உத்தியோகஸ்தர்கள்: அரசுத் துறைகளில் பணி செய்வோருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த ஆண்டில் பதவி உயர்வு  கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம்  கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
 
வியாபாரிகள்: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம்.  மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.  கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.
 
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும்  வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு  கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும்.
 
கலைத்துறையினர்: பொறுப்புகள் கூடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த  ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின்  ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
 
மாணவமணிகள்: மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.
 
அசுபதி: இந்த ஆண்டு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.  வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில்  ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று  கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல்  ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.
 
பரணி: இந்த ஆண்டு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம்  கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில்  வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.
 
கார்த்திகை 1: இந்த ஆண்டு பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில்  கவனம் தேவை. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும்  சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து  தப்பித்துக்கொள்வீர்கள். 
 
பரிகாரம்: அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.
 
சொல்ல வேண்டிய மந்திரம்: "சுப்பிரமணிய புஜங்கம்" பாராயணம் செய்யவும்.
 
மலர் பரிகாரம்: "செவ்வரளி மலரை" அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
 
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
 
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments