Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (15:09 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

 
குடும்பபாசம் மிகுந்தவரான மேஷ ராசியினரே நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
 
தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும்.  வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. 
 
உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.
 
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 
 
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  
 
பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.
 
மாணவர்களுக்கு  உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்
 
அசுபதி:
இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். 
 
பரணி:
இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
 
கார்த்திகை - 1:
இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். 
 
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments