Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (17:05 IST)
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

 
கிரகநிலை:
ராசியில் குரு(அசா)  - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி(வ) என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
கும்ப ராசியினரே இந்த மாதம் என்பது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.
 
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும்.  அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.
 
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.
 
பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். 
அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
 
மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
 
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  புதியதாக இடம் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.
 
சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.  
 
பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
இந்த மாதம் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம். சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.
 
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments