Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Prasanth K
ஞாயிறு, 29 ஜூன் 2025 (20:08 IST)
கிரகநிலை:
 ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் செவ், கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்:
02.07.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  சனி வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
03.07.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
17.07.2025  அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.07.2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26.07.2025  அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.07.2025  அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
மனதில் நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் வரை போராடும் குணமுடைய ரிஷபராசியினரே, இந்த மாதம் கோபத்தை குறைத்து கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பொறுமையுடன் செல்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக் கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். திடமான மனதுடன் செயல்பட்டால் சில நல்ல பலன்களை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக் கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமுடன் செயலடுவது அவசியம்.

கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். கவலை வேண்டாம். நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

ரோகிணி: 
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடை போட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்கவும்.

மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்: 
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை வீண்போகாது. முழு முயற்சியுடன் ஈடுபட்டால் நீங்கள் நினைத்தது நடக்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்க பணப்பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 09, 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 25, 26

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments