Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2022 - மீனம்

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (14:58 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
25-09-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
03-10-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
09-10-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க தெரிந்த மீனராசியினரே நீங்கள் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த காலகட்டத்தில் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்:      செப் 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 21, 22

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments