Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணவீக்கமும் குருப் பெயர்ச்சியும்!

பணவீக்கமும் குருப் பெயர்ச்சியும்!
, வியாழன், 28 ஏப்ரல் 2011 (19:15 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தற்பொழுது அரசிற்குப் பெரும் தலைவலியாக இருப்பது பணவீக்கம். பணத்தினுடைய வாங்கும் சக்தி நாளுக்கு நாள் வருடத்திற்கு வருடம், சொல்லப்போனால் மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக உணவுப் பொருட்களுடைய விலையேற்றம். உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும் என்று சொன்னார்கள். ஆனால் உற்பத்தி அதிகரித்தும் விலை குறையவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழல் இந்த புத்தாண்டினுடைய பிறப்பா? அல்லது வரக்கூடிய குருப் பெயர்ச்சியால் மாறுமா? எப்படி ஆகும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கர வருடப் பிறப்பு என்று பார்க்கும் போது உணவு உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் வெள்ளச் சேதத்தால் உணவு உற்பத்தித் திறன் குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. அதேபோல, பருவம் மாறி மழை பொழிதல், அதாவது விதைக்கும் காலத்தில் காய்ந்துவிட்டு, அறுவடை காலத்தில் பொழிந்து வெள்ளத்தால் பாதிப்படைவது போன்று மாறி மாறி வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

கர வருடம் பிறந்துள்ள மகம் நட்சத்திரம் என்பது கேதுவினுடைய நட்சத்திரம். கேது என்பது ஆக்கும் குணம், அழிக்கும் குணம் என இரண்டு குணங்களையும் கொண்டது. மக்கள் மத்தியியில் ஞான மார்க்கத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் சில ஆன்மீகவாதிகள் இறக்க நேரிடும். ஏனென்றால், கேது நியாயமானவற்றை செய்ய வைப்பார். அதே நேரத்தில் ஆன்மீகவாதிகளையும் பாதிக்க வைப்பார். ஆன்மீகவாதிகள் சொத்துக்களை சிலர் அபகரிப்பார்கள். அதுபோலவும்தான் இந்த கர வருடப் பிறப்பு அமைந்துள்ளது.

உணவு உற்பத்தி அதிகரிக்கும், அதே நேரத்தில் உணவுப் பற்றாக்குறையும் உண்டாகும். அதாவது இயற்கை சீற்றங்களால் சேதாரங்கள் அதிகமாகிக்கொண்டே போகும். அந்த மாதிரியான அமைப்புதான் உள்ளது.

நிதி என்று எடுத்துக்கொண்டால் அதற்குரிய கிரகம் குரு பகவான்தான். வங்கி, பணம், கருவூலம் என பணம் தொடர்பான அனைத்திற்கும் குரு தான். தற்போது குரு சொந்த வீட்டில் இருக்கிறார். மே மாதம் 9ஆம் தேதியில் இருந்து மேஷத்திற்கு வருகிறார். அப்படி மேஷத்திற்கு வரும்போது, கடக ராசி இந்தியாவினுடைய 10வது ராசிக்கு குரு மாறுகிறார். அப்போது பல அரசியல் தலைகள் உருளும். சில கட்சிகள் காணாமல் போவதற்கே வாய்ப்புகள் இருக்கிறது. கோலோச்சிய கட்சிகளெல்லாம் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தவிர, சில அரசியல் தலைவர்களுடைய உயிரிழப்பு, அவமானப்படுதல், அசிங்கப்படுதல் போன்றெல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு வரப்போகிறது. தெரிந்தோ, தெரியாமலோ கடந்த காலத்தில் செய்த தவறுகளெல்லாம் வெளியில் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குற்றமற்றவர் என்று நாம் நினைத்தவரெல்லாம், இப்படி செய்துவிட்டாரே என்று தெரியவருவதற்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், மேஷ குரு என்றால் அப்படிதான். தவறுகளுக்கு கடுமையாக தண்டனைகளைக் கொடுக்கக் கூடியவர்.

மேஷம் செவ்வாய் வீடு. செவ்வாய் சட்டம் ஒழுங்கிற்கு உரியது. அதேபோல காவல் துறையின் கை ஓங்கும், எண்கவுண்ட்டரும் அதிகரிக்கும். ரவுடியிசம் சுத்தமாக அழிக்கப்பட்ட என்ற நிலை வரும். ராணுவத்தை நவீனமாக்குவார்கள், அதற்கான செலவுகளை அதிகரிப்பார்கள். குரு மேஷத்திற்கு வருவதால், செயற்கைக்கோள்கள், இயற்கை சீற்றங்களை கண்டுபிடிப்பதற்கான நவீன யுக்திகள், முயற்சிகள் அதிகமாகும். மேலும் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் வரும்.

மக்களிடையவாங்கும் சக்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் பணப் பற்றாக்குறை நீடிக்கும், விலைவாசி ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

Share this Story:

Follow Webdunia tamil