ராமர் பாலம் : அரசியலில் மாற்றம் நிகழும் - கணிப்பு!

ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன்

Webdunia
webdunia photoWD
அயோத்தி ராமர் கோயில், ராமர் பாலம் ஆகிய பிரச்சனைகளால் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழப் போகிறது என்று ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் கூறியுள்ளார்!

எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, நவம்பர் மாதத்தில் நிகழப் போகும் குருப் பெயர்ச்சியின் காரணமாக இந்த மாற்றங்கள் நிகழும் என்று வித்யாதரன் கூறியுள்ளார்.

" இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இரவு 16 ஆம் தேதி விடியற்காலை குருப் பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து குரு தனுசுக்கு இடம் பெயர்கிறது. தனுசு ராசி வில்-அம்பு சின்னம் கொண்டது. ராமனின் ஆயுதம் வில்லும்-அம்புமே. எனவே, இப்பிரச்சனைகள் பெரிதாகும்.

அயோத்தி ராமர் கோயில், ராமர் பாலம் பிரச்சனைகளால் பலர் கட்சி மாறுவார்கள். சிலர் பதவி விலகுவார்கள். நாட்டில் ஒரு பெரும் ஆன்மீகப் புயல் வீசும். இதனை பாரதிய ஜனதா கட்சி நன்றாக அறுவடை செய்துவிடும்".

கேள்வி : இந்தப் போக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா?

வித்யாதரன் : கண்டிப்பாக. பா.ஜ.க.வின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். அத்வானிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments