Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரகணத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்?

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2009 (10:00 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
கிரகணத்தில் பிறந்தவர்களை தீய சக்திகள் (பில்லி சூனியம், மாந்திரீகம், செய்வினை) எளிதில் தாக்காது. அதே தருணத்தில் ஒருவர் எந்த கிரகணத்தில் (சூரியன்/சந்திரன்) பிறந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

சூரிய கிரகணத்தில் பிறந்திருந்திருந்தால் அவரது ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருக்கும். அதுவே சந்திர கிரகணத்தில் பிறந்திருந்தால் சந்திரனுடன் ராகு/கேது சேர்ந்திருக்கும்.

சூரிய கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு உள்ள சூரியன்+ராகு/கேது சேர்க்கையை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலோ, அந்த சேர்க்கையுடன் சனி அல்லது செவ்வாய் இணைந்தாலோ அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். குடத்தில் இட்ட விளக்கு போல் அவர்களின் வாழ்க்கை இருக்கும். அதிகம் படித்திருந்தாலும் நல்ல வேலை கிடைக்காது.

கிரகணத்தில் போது பிறந்தவரின் ஜாதகத்தில் சூரியன்+ராகு/கேது அல்லது சந்திரன்+ராகு/கேது சேர்க்கையை குரு பார்த்தாலோ அல்லது அதனுடன் சேர்ந்திருந்தாலோ அவர்களுக்கு சூட்சும சக்திகள் இருக்கும்.

கடந்த 1999இல் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவருக்கு சூரியனுடன் ராகு, குரு, புதன் ஆகிய 4 கிரகங்களும் ரிஷபத்தில் இருந்தது. விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் இந்த சேர்க்கையை பார்க்கும் வகையில் அமைந்திருந்தது.

மின்காந்த அலைகளுக்கு அதிபதியான குரு, சூரியன்+ராகு+புதன் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்திருப்பதாலும், அந்த சேர்க்கையை மின்சாரத்திற்கு உரிய கிரகமான செவ்வாய் பார்ப்பதால் அவருக்கு மின்சாரம் தொடர்பான ஏதாவதொரு சக்தி இருக்கும் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அதுபோன்ற சிறப்பு சக்திகள் எதுவும் தன்னிடம் இருப்பதாகக் தெரியவில்லை எனக் கூறினார்.

ஆனால் பல மாதங்கள் கழித்து மீண்டும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், தனது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், அதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் உணர்ந்தாலும், தன்னால் உணர முடியவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

அவரது உடல் அதிகளவு மின்சாரத்தை தாங்கக் கூடியதாக இருந்ததால், மின் கசிவின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தை அவரால் உணர முடியவில்லை. உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டால் மட்டுமே அவர்களால் பாதிப்பை உணர முடியும். அவரின் பேட்டி கூட சில நாளிதழ்களில் வந்தது. கிரகண நேரத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கையுடன் பிறந்தததே அவரது இந்த சக்திக்கு காரணம்.

கிரகணத்திற்கு உள்ளான கிரகங்கள் மிகவும் பலவீனமாக காணப்பட்டால் அந்த ஜாதகர் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாதவராக, சலிப்பான, வெறுப்பான மனநிலை உடையவராக காணப்படுவார். அவருக்கு தற்கொலை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை இயல்பாகவே ஏற்படும்.

இதேபோல் கிரகணத்திற்கு உள்ளான கிரகங்கள் வலுவிழந்தால் தன்னை விட மூத்த பெண்களை அல்லது திருமணமான பெண்களை மணப்பது போன்றவை அந்த ஜாதகருக்கு நிகழும். இப்படி ஜாதக அமைப்பு இருப்பவர்களுக்கு வயதில் மூத்த அல்லது உடல் ஊனமுற்ற பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்று நானே எடுத்துக் கூறியுள்ளேன்.

அதனால் கிரகணத்தில் பிறப்பவர்களுக்கு என்று தனி சக்தி உண்டு. ஆனால் அந்த ஜாதகர் எந்த கிரகணத்தில், எந்த கோள்களின் சேர்க்கையுடன் பிறக்கிறார் என்பதே அவரின் சக்தியை நிர்மாணிக்கும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments