ஒருமுறை நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு சில காரணங்களால் அத்திருமணம் நடக்காமல் போகிறது. மீண்டும் வேறு வரன் பார்த்து திருமணம் செய்வதற்கு முன்பாக பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா? இதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
பதில்: பொதுவாக ஒரு பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்கு முன்பாக நல்ல தசாபுக்தி நடக்கிறதா? குரு பலன் உள்ளதா? என்பதைப் பார்த்த பிறகே திருமணம் நிச்சயிக்க வேண்டும். இதனால் திருமணம் தடைபடுவதை தடுக்க முடியும்.
மேற்கூறிய காரணிகள் சரியில்லாத நேரத்தில் திருமணம் நிச்சயிக்கும் போதுதான் அதில் தடங்கல் ஏற்படுகிறது.
இந்த மாதிரியான நேரங்களில் திருச்சந்தூர் முருகன் கோயிலுக்கு வளர்பிறை சஷ்டி திதியில் சென்று வழிபாடு நடத்தி வரலாம். இதன் மூலம் கர்ம வினைகள் (இருந்தால்) நீங்கும். மீண்டும் வரன் நிச்சயிக்கும் போது இடையூறுகள் தடை வராமல் இருக்கும்.