Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சில‌ர் எ‌ப்போது‌ம் ‌சிடு‌சிடு எ‌ன்று இரு‌ப்பது ஏ‌ன்?

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2011 (20:15 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், சிரித்த முகத்துடன் எந்த ஜாதகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள் என்று. ஆனால் வாழ்நாள் முழுவதும் சிடுமூஞ்சியாக சிலர் இருக்கிறார்களே அவர்களுடைய ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்?

ஜோ‌தி ட ர‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: வாழ்நாள் முழுவதும் சிடுமூஞ்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் யாராவது ஒருவரிடமாவது சிரித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். நிறைய பேரிடம் இருந்தாலும் யாராவது ஒருவரிடத்திலாவது அவர்கள் சிரித்துப் பேசுவார்கள். பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு லக்னத்தில் பிறக்கிறார்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னம் இருக்கிறது, 12 இராசி இருக்கிறது. அதில் சில கிரகங்கள் லக்னத்தில் இருந்தால் இதுபோல் ஆகும். சில காம்பினேஷன் அப்படி.

பொதுவாக 6ஆம் வீட்டிற்குரிய கிரகம். ரோகம், குணம், சத்ரு, எதிர்மறை எண்ணங்கள் இதற்கெல்லாம் உரிய இடம் 6ஆம் இடம். அதற்கடுத்து 8 என்பது அலைச்சல், டென்ஷன், எமோஷன் இதெல்லாம் கொடுக்கக்கூடியது. இந்த 6க்குரிய கிரகமும், 8க்குரிய கிரகமும் லக்னத்திலேயே உட்கார்ந்திருந்தால் சிடுசிடு என்றும், கடுகடு என்றும் இருப்பார்கள். மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், அதனை சிலாகித்துப் பேசுவது, அல்லது அதனை மக்களோடு மக்களாக இருந்து அனுபவிப்பதோ எல்லாம் கூட அவர்களுக்குத் தெரியாது.

இதுபோன்ற குறைபாடுகள் 6க்குரிய கிரகம், 8க்குரிய கிரகம் லக்னத்தில் இருக்கும் போது, லக்னாதிபதி மறையும் போது, அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது, மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது போன்றதெல்லாம் குறையும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments