Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2011 (20:47 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: இந்த ஆண்டினுடைய பலன்களைப் பார்க்கும் போது மழையினுடைய அமைப்பு சரியாக இல்லை. பருவ நிலை மாறி மழை பொழியும் என்று முன்பே சொல்லியிருக்கிறோம். சீரான மழை என்று சொல்லக்கூடிய, விளை நிலத்திற்கு உரிய மழை தற்பொழுது இருக்காது. விளை நிலத்திற்கு ஏற்றது என்றால், ஆடி மாதத்தில் ஒரு மழை பெய்யும். அதன் பிறகு மெது மெதுவாகத் தூறும். இதுபோன்ற லேசான சன்னமானத் தூறலில்தான் பூமி ஊறும். விவசாயத்திற்கு தகுந்த மாதிரி பூமி ஊறுவது இந்த காலகட்டத்தில்தான்.

தவிர, பெரு மழையாக அடித்து, பெரு வெள்ளம் ஏற்பட்டு அணை வழிந்து அடுத்த 5 நாட்களில் ஏரிகளே நிரம்ப விவசாயமே செய்ய முடியாத நிலை போன்றுதான் இதற்குமேல் இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், கிரக அமைப்புகளில் உள்ள கதிர்வீச்சுத் தன்மையெல்லாம் தற்பொழுது மாறிக்கொண்டே வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய இயல்பு நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்பட ஆரம்பித்திருக்கிறது. தவிர, ஏவிவிடப்படும் செயற்கைக்கோள்களின் இயக்கங்களாலும் இயற்கையினுடைய இயக்கமும் கொஞ்சம் மாறுபடுகிறது.

மாறுபாடு என்றால், சின்ன அசைவு என்று சொல்வோமோ அதுபோல ஒரு சின்ன சலனம் - பெரிய குளத்தில் ஒரு சிறிய கல்லை விட்டெறிந்தால் அலைகளில் அந்த நேரத்தில் சலனத்தை உண்டுபண்ணி பிறகு அமைதியாவது போல - அதுபோல, மனிதன் தன்னுடைய அறிவால் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பித்தது, இதுபோன்ற ஆராய்ச்சி என்ற பெயரில் அழிக்க ஆரம்பிக்கும் போது இந்த மாதிரியான பேரழிவுகளை நோக்கிதான் உலகம் சென்றுக் கொண்டிருக்கிறது.

அதனால், இயற்கை மட்டுமின்றி, கிரகங்களின் சில சீற்றங்களும்தான் இதற்குக் காரணம். அதனால், வடகிழக்குப் பருவ மழை உண்டு. ஆனால், அது விளைச்சலுக்குப் பயன்படாததாக இருக்கும். திடீரென பெரு வெள்ளம், 4 மாவட்டங்கள் மூழ்கின, 4 மாநிலங்கள் மூழ்கின போன்று இருக்கும். படிப்படியாக இதமாகப் பெய்யாமல், திடீர் மழை, திடீர் வெள்ளம் என்பது போன்று இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments