Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
, புதன், 1 ஏப்ரல் 2009 (18:07 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

மக்களவைத் தேர்தல் பூராடம் நட்சத்திரத்தில் துவங்கி பூராடம் நட்சத்திரத்திலேயே நிறைகிறது. தேர்தல் தேதி துவங்கும் நாள் மிகவும் மோசமாக உள்ளது.

“பாய்த நீர் படுத்தோர் தேறார்; வழிநடை போனோர் மீளார” என்று கூறுவது உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் ஒருவர் உடல்நிலை குன்றி நோய்வாய்ப்படுகிறார் அல்லது அன்றைய தினம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அவர் மீள்வது கடினம். அதேபோல் அந்த நட்சத்திரத்தன்று பயணம் மேற்கொண்டால் விபத்துகள், குறிக்கோள் நிறைவேறாத நிலை ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் துவங்கி முடிவடைவதால் இந்த மக்களவைத் தேர்தல் மிகவும் சவாலானதாக விளங்கும். வாக்குப்பதிவு விகிதம் துவக்கத்தில் மந்தமாக காணப்படும். எனினும் இறுதியில் ஓரளவு பரவாயில்லை என்றும் கூறும் அளவுக்கு இருக்கும்.

வாக்குப்பதிவு எதிர்பார்த்த அளவு இருந்தாலும், வன்முறை, கலவரங்கள் போன்ற விரும்பத்தகாத செயல்கள் அதிகளவில் நடக்கும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் வருத்தம் ஏற்படும்.

பூராடத்தில் தேர்தல் நடப்பதால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதனால் யாரும் எதிர்பார்க்காத, அரசியலில் சாதாரண நிலையில் உள்ள ஒருவர் முக்கிய பதவிகளில் அமரும் நிலை ஏற்படும். குறிப்பாக, வடஇந்தியாவைச் சேர்ந்த ஒருவர் (குஜராத், பீகார் அல்லது உத்தரப்பிரதேசம்) பிரதமர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

எனினும் அவர் பதவிக்காலம் முடியும் வரை பிரதமர் பதவியில் தொடர முடியாமல் போகலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் சுழற்சி முறையில் பிரதமர் வருவதற்கான வாய்ப்பும் ஏற்படலாம்.

தற்போது நீச்சத்தில் உள்ள குரு மே மாதம் 1ஆம் தேதி முதல் கும்பத்திற்கு செல்கிறார். சனியின் பார்வையில் 8ஆம் இடத்தில் குரு மறைவதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும்.

ஒரு பக்கம் பண முதலைகள் சிறப்பாக வியாபாரம் செய்வர். மறுபக்கம் ஜனநாயகம் பணநாயகம் ஆனது போன்ற நிலை காணப்படும். பணம் படைத்தவர்கள் கை நீட்டும் திசையில் இருப்பவர் பிரதமராவது; செல்வந்தர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கு மந்திரி பதவி என்ற வகையில் இது போகும்.

Share this Story:

Follow Webdunia tamil