Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன்?

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2011 (20:39 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: வட இந்தியாவில் திருமணமாகி வீட்டிற்கு வரும் பெண் வாசலில் அரிசி நிறைத்து வைத்திருக்கும் பாத்திரத்தை உதைத்துவிட்டு உள்ளே வரும் சம்பிரதாயத்தின் உள் அர்த்தம் என்ன?

ஜோ‌தி ட ர‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: வட இந்தியாவில் இதுபோன்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் தென் இந்தியாவில் சில சமூக‌த்‌தினரிடம் அரிசியோ அல்லது நெல்லோ மரக்காவில் நிறைத்து, முக்கியமானவர்கள் வரும் போது சிவப்பு கம்பளம் விரிப்பது போல வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் நெடுக கொட்டுவார்கள். அதில் அவர்கள் நடந்து வருவதற்காக. அதாவது மணப்பெண்ணை அவர்கள் மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அதுதான் ஐதீகம். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது.

இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். ஏற்கனவே வீட்டில் ஒரு விளக்கு இருக்கும். ஆனால் புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு, நல்ல விளக்கு என்று சொல்வார்கள். அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள்தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம்.

ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மணநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments