த‌மிழக ச‌ட்டம‌ன்ற‌த் தே‌ர்த‌ல் யாரு‌க்கு‌ச் சாதகமாக இரு‌க்கு‌ம்?

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2010 (16:25 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: இன்னும் 4 மாதங்கள்தான் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான காலம். இ‌‌‌ந்‌நிலை‌யி‌ல், இந்தத் தேர்தல் யாருக்குச் சாதகமாக இருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: தமிழ்நாடு ஜாதகத்தை எடுத்துப் பார்க்கும் போது, தமிழ்நாட்டிற்கு வெள்ளி (சுக்ரன்) மிகவும் முக்கியமானவர். இந்திய ஜாதகத்திற்கு சுக்ரன் முக்கியமானவர்.

தற்பொழுது சுக்ரன் வக்கிரமாகிக் கிடக்கிறார். இவர் வக்கிர நிலையில் இருந்து விலகும் போதுதான் தெளிவான முடிவுகள் கிடைக்கும்.

ஏனென்றால், தற்பொழுது சுக்ரன் தன்னுடைய வக்கிர நிலையில் இருந்து மாறவில்லை. அதற்கான காலகட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான் வருகிறது. இதன்படி பார்த்தால், ஜனவரி மாதம் 2ஆம் தேதிதான் சுக்ரன் வக்கிர ந ி ¨லியில் இருந்து மாறுகிறார். அதன்பிறகுதான் தமிழக அரசியலில் சூடு பிடிக்கும். தெளிவு பிறக்கும், தேர்தல் கூட்டணி மாற்றங்கள் போன்றவை நடக்கும்.

அடுத்தடுத்த பெரிய பெரிய நிகழ்வுகள் அரங்கேறப் போவது 2011ல்தான். ஏனென்றால் ஜனவரி 2ஆம் தேதிக்குப் பிறகுதான் சுக்ரன் மாறுகிறார். அதன்பிறகுதான் பலருடைய உள் மனதில் இருக்கக் கூடிய விஷயங்கள் எல்லாம் வெளிவரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments