Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.எம்.செளந்தர்ராஜன் குரலின் பெருமைக்குக் காரணம்?

Webdunia
திங்கள், 12 ஜூலை 2010 (19:52 IST)
தமிழ்.வெப்துனியா.காம ்: தமிழ்த் திரைப்பட உலகில் புகழுடன் திகழ்ந்த டி.எம். செளந்தர்ராஜன் இன்றுவரை ஒப்பிலா பாடகராக உள்ளார். எந்த நட்சத்திர அமைப்பு இந்த அளவிற்கு சிறந்த பாடகராக அவரை உயர்த்தியது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன ்: ‘மாலுடன் வள்ளிப் பெரின் மதிமிக பெருமிதந்தான ே ’ என்று ஒரு பாடல் இருக்கிறது. மால் என்றால் புதன், வள்ளி என்றால் சுக்ரன். இந்த இரண்டு கிரகங்கள் சேர்ந்தாலே இசையில், பாடல்களில் பாண்டித்தியம் கொடுக்கும். இதில் சந்திரன் மிக மிக முக்கியம். சந்திரன்தான் சமயோசித புத்தி. சுரங்களை பிரித்தெடுப்பதற்கு சந்திரன் முக்கியம். ஏற்ற இறக்கம் கொடுத்து பாடுகிறார்கள் என்று சொல்வார்களே, அதற்கு சுக்ரன் முக்கியம். இவை எல்லாவற்றையும் விட இசையமைப்பாளர் சொல்வதை புரிந்துகொண்டு பாடவேண்டும். இது இல்லாமல், மொழித்திறனும் இருக்க வேண்டும். சிலர் வேறு தாய்மொழி கொண்டவர்கள் வேற்று மொழியில் பாடுகிறவர்களும் இருக்கிறார்கள். அதுவும் ஒரு பெரிய திறன்தான். ஏனென்றால் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு மாற்று மொழியில் உச்சரித்து பாடுவதற்கு, ஒரு ஆர்வம், ஞானமும் இருந்தால் தான் முடியும்.

இவருடைய ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர் வரவில்லை. அவருடைய நண்பர் ஒருவர் கொண்டுவந்து காண்பித்திருக்கிறார். 1994இல். அவருடைய ஜாதகத்தில் புதன், வெள்ளி இதெல்லாம் பிரமாண்டமாக இருக்கிறது. இது, நட்பு சேர்க்கை, நட்பு கிரகங்களோடு இருப்பது, குரு பார்வையில் இருப்பது எல்லாம் அற்புதமாக இருக்கிறது.

இதேபோல, 2ஆம் இடம் வாக்கு ஸ்தானம் என்று சொல்கிறோம். அந்த குரல் வளத்திற்கு 2ஆம் இடம் மிகவும் முக்கியம். இதுதான் நம்முடைய நாத பிம்பம், ஒலி வருகிற நாபியில் வரும் உச்சரிப்பு, உதட்டமைப்பு, நா அசைவு இதெல்லாம் மிக மிக முக்கியம். புதன், சுக்ரன், வாக்காதிபதி அவருக்கு மிகவும் வலிமையாக இருக்கிறது. அதனால்தான் அவர் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைக்கு பாடியிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த அளவிற்கு அவருக்கு ஞானம் கிடைத்தது வாக்காதிபதியினுடைய பலமும், சுக்ரன், புதனுடைய பலமும், சந்திரனும் அவருக்கு மிகவும் வலிமையாக இருந்திருக்கிறது. இதெல்லாம் வலிமையாக இருந்தால் ஒருவரை பாடகர் துறைக்கு ஒருவரை அனுப்பலாம்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments