எ‌ரிபொரு‌‌ள் ‌விலை குறை‌யுமா?

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2011 (20:32 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் உயர்த்தப்படும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் உயரவில்லையென்றாலும், இங்கே உயர்த்திக் கொண்டே வருகிறார்கள். இந்நிலையில் விலை குறைக்க வாய்ப்பு உள்ளதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எரிபொருள் விலை டிசம்பர் 21க்குப் பிறகு இன்னும் விண்ணைத் தொடும் அளவிற்கெல்லாம் வரும். பெட்ரோலைப் பற்றி பேசப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. 100 ரூபாயைக் கூட எட்ட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சனி கனிம, கரிம பொருட்களுக்கு உரிய கிரகம். அவர் இதற்குமேல் பற்றாக்குறையைத்தான் எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவார்.

மற்றொரு பக்கத்தில், சோலை வனமாக இருக்கும் இடங்கள் பாலை வனமாக மாறி அங்கு பெட்ரோல், டீசல் கண்டுபிடிப்பதற்கெல்லாம் கூட வாய்ப்பு உள்ளது. சோழ நாடு சோறுடைத்து என்று சொல்வார்கள் தஞ்சை பகுதியை. அந்தப் பகுதியில் கூட இதுபோன்ற நிலை வருவதற்கு வாய்ப்பு உண்டு. கனிம பூமி இருக்கும் இடங்கள் மாறும். பாலை வனத்தில் நெல் விளைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நெல் விளையும் இடத்தில் பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments