ஊழலுக்கு எதிரான போராட்டங்களால் பலன் இருக்குமா?

Webdunia
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: ஊழலுக்கு எதிரானப் போராட்டம், ஊழலுக்கு எதிரான பெரிய இயக்கங்கள் முதலில் அண்ணா அசாரே, அதற்கடுத்து பாபா ராம்தேவ். ஊழல் தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் சூட்டோடு விவாதிக்கப்படக் கூடிய அதற்கு எதிரான சட்டம் லோக்பால் என்ற நிலை ஏற்படுகிறது. உள்ளபடியே இதுபோன்று நடைபெறக்கூடிய போராட்டங்கள், மற்ற மற்ற விடயங்கள் இந்தியாவிற்கு ஒரு சாதகமான அரசியல் சூழல், தூயச் சூழலை நோக்கி கொண்டு செல்லுமா? இல்லை அப்படியே கொஞ்ச நாள் இருந்துவிட்டு அடங்கிவிடுமா?

ஜோ‌தி ட ர‌‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: தற்போது கன்னியில் சனி இருந்துகொண்டு இருக்கிறார். கன்னி புதன் வீடு. புதன்தான் புத்திக்குரிய கிரகம். புதன்தான் தன்னை சுற்றி இருக்கக்கூடியவற்றை ஆய்விற்கு உட்படுத்தக்கூடிய கிரகம். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து ஒருத்தரே ஆளவேண்டுமா? நாம் ஏன் ஆளக்கூடாது? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அண்ணா சொன்னது போல், புது சிந்தனை, நம்மாலும் எல்லாமும் முடியும், நாமும் புத்திசாலிதான் என்று தன்னைத்தானே மகுடம் சூட்டிக்கொள்ளும் சக்தியும் புதனுக்கு உண்டு.

இந்த புதன் வீடான கன்னியில் கடந்த இரண்டேகால் வருடமாக சனி பகவான் உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான் இவ்வளவு பெரிய எழுச்சி, புரட்சி எல்லாம் இங்கு மட்டுமல்லாது, உலகெங்கிலும் நடக்கிறது. அடக்குமுறைகளைத் தாண்டி ஊழலுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக எல்லா கண்டங்களிலும் இது நடந்து கொண்டிருக்கிறது. இது இதோடு நிற்காது. இதனை ஒடுக்கவும் முடியாது.

ஏனென்றால், துலாமிற்கு சனி மாறும் போது இந்தக் குரல் இன்னமும் அதிகமாக ஒலிக்கும். இந்த வருடம் டிசம்பர் 21ல் துலாத்திற்கு சனி மாறுகிறார். அப்பொழுது இன்னும் இது கடுமையாகும். அப்படி கடுமையாகி போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு சாதகமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments