Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ட்சய ‌திரு‌தியை அ‌ன்று எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌ம்?

Webdunia
புதன், 25 மே 2011 (19:08 IST)
த‌‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: அட்சய திருதியை தினம் முடிந்துவிட்டது. மிகப்பெரிய அளவில் தங்கம் விற்றுள்ளது. இது மூடநம்பிக்கை வணிக மயமாவதாக அர்த்தம் கொள்ளலாமா? அட்சய திருதியை நாட்களில் தங்கம் வாங்கி அணிவது முற்காலங்களில் இருந்ததா?

ஜோ‌தி ட ர‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: வேதங்களில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது. யசூர் வேதம் போன்றவற்றில் வாழ்வியல் முறைகளில் சிலதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும், வளர்ச்சி அடையும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அதில் பிரதானமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து ஒருவர் வெள்ளை நிறத்திற்குப் பிளாட்டினம் வாங்கி அணியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மஞ்சள் நிறத்திக்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ச‌ரியானத‌ல் ல.

பொதுவாக தானியங்களில்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால்தான் திருமணம் முடிந்த நங்கைகள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது மரக்காவில் பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே வரச்சொல்வார்கள்.

அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அர ி‌ச ிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

அதற்கடுத்து மஞ்கள், இதில்தான் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு.

அடுத்தது, அட்சய திருதியை அன்றைக்கு வேதங்கள் என்ன சொல்கிறது, உத்திர கால விரதம் என்ற நூலில் கூட எ‌ன்ன சொல்லப்பட்டுள்ளது எ‌ன்றா‌ல ், அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள், வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

தவிர, அட்சய திருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும். அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்துதானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம்தானே. அதாவது மந்திரங்கள், வேதங்கள் படிப்பவர்களை மதித்து தானம் தருவது. இதுபோன்றுதான் சொல்லப்பட்டிருக்கு.

தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை. பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகுதான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு. அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால்தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments