Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரு‌விழா‌க்க‌ளி‌ல் உ‌றியடி, ‌தீ ‌மி‌தி எத‌ற்காக?

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (21:04 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: திர ுவிழாக்களில் உறியடி, தீ மிதி, வாள் ஏறுதல் போன்ற ஆபத்து நிறைந்த காயம் ஏற்படுத்தக்கூடியன போன்றெல்லாம் எதற்காக செய்யப்படுகின்றன?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இதெல்லாம் நம்முடைய பண்பாடு தொடர்பானது. பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் இதெல்லாம். கலைச் சின்னங்கள் போன்று, இதெல்லாம் விளையாட்டுச் சின்னங்கள், பாரம்பரியச் சின்னங்கள். இதனை இறைவன் பேரால் சொல்லும் போது செய்யும் போது எண்ணம் ஒருமுகப்படுகிறது. சாதாரணமாக உறியடிக்கச் சொன்னால் திணறுவார்கள். அதையே விஷாக்கோலத்தில் அடிக்கச் சொன்னால் சரியாக அடிப்பார்கள். உள்ளத்தில் தியானம் செய்து செய்பவர்கள் இருக்கிறார்கள்.

தற்பொழுதெல்லாம் கண்காட்சிகளை ஒரு வாரத்திற்கு எப்படி வைக்கிறார்களோ, அதுபோல இதனை நம்முடைய பண்பாட்டு கண்காட்சி, திருவிழா கண்காட்சி என்று வைத்துக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் மன்னர்கள் இதனை மிகப்பெரிய அளவில் எடுத்து செய்தார்கள். ஏனென்றால் ஒன்று பட்ட சமூகம் இருந்தது. அதனால் தன்னுடைய உழைப்பு, பொருள், செல்வம் அனைத்தையும் கொடுத்து மக்களுக்கு அதனைத்தான் பொழுதுபோக்கு காலமாகக் கொண்டு வந்தார்கள்.

ஆன்மீகமும் இருக்க வேண்டும், பொழுதுபோக்கும் இருக்க வேண்டும். அதனால்தான் கலந்து கலந்து கொடுத்தார்கள். இன்றைக்கும் எடுத்துக்கொண்டால், பெரிய ஆலயங்களில், ஆயிரங்கால் மண்டபத்தில்தான் பரத நாட்டியங்கள், கச்சேரிகள் எல்லாம் நடக்கிறது. ஒருபக்கத்தில் ஆன்மீகம், மறுபக்கதில் பொழுது போக்கு.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments