Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்?

ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன” என வேதங்கள் கூறுகின்றன.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.

சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.

உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

அதற்கடுத்தபடியாக 9ஆம் இடத்தில் சுப கிரகங்கள் (வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு) இருப்பது நல்லது. பொதுவாக 5, 9ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.

Share this Story:

Follow Webdunia tamil