2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (16:03 IST)
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷபராசியினரே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர். இந்த ஆண்டு எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும்.  பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளை சுலபமாக சமாளிக்கும் திறமை வந்து சேரும். 
புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய  ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  ராசிக்கு இரண்டில் செவ்வாய் பார்வை இருப்பதால் கணவன்,  மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை  வரலாம்.
 
பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை  தவிர்ப்பது நல்லது. ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக்  கடைபிடிப்பது நல்லது.  
 
அரசியல் துறையினருக்கு மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த  ஆலோசனை பெறவும்.
 
மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. 
 
கார்த்திகை:
 
இந்த ஆண்டு சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள்  சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 
 
ரோகினி:
 
இந்த ஆண்டு எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. 
 
மிருகசீரிஷம்:
 
இந்த ஆண்டு தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன்  விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. 
 
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments