Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை அதிகமாக பாதிக்கும் எலும்பு தேய்மானம்...!

Webdunia
எலும்பு தேய்மானம் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்குகிறது. இவை பெரும்பாலும் 45 வயதுள்ள பெண்களை அதிகம் தாக்க தொடங்கி பின்பு மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. இந்த தாது உப்பை உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. ஆண்களில் வயதானவர்களையும் பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மானம் நோய் பாதிக்கிறது.
 
எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.
 
பெண்களின் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிரந்திரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும்  ஹார்மோன் மாறுபாடுகளால்  எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும். பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மெனோபாஸ்  காலத்தில் பலர் கர்ப்பப்பை அகற்றுவதும் ஆஸ்டியோரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments