Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐயப்பன் நித்திய பிரம்மசாரியாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

Webdunia
காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரனை ஆதிபாராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள்.  பிரம்மாவும் அவள் முன் தோன்றினார். அவரிடம் மகிஷி மூன்று வரங்களைக் கேட்டாள்.


 
 
முதல் வரத்தால் பதினான்கு உலகங்களையும் தன் வசமாக்கிக்கொண்டாள். தன் ரோமங்களிலிருந்து தன்னைப் போன்ற வீராங்கனைகள் தோன்ற வேண்டும் என்பது இரண்டாவது வரம். மூன்றாவது வரம் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் ஒருவரால்தான் தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்றும், அவர் 12 ஆண்டு காலம் மனித குலத்தில் வசித்து பிறகு பிரம்மச்சாரிய பலத்தால்தான் தன்னை கொல்ல வேண்டும் என்றும் வரம் கேட்டாள்.
 
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்காது. அப்படியே பிறந்தாலும் அது 12 வயது வரை உயிரோடிராது. அப்படியே இருந்தாலும் பிரம்மச்சாரி விரதத்தை கடைபிடிக்காது. ஆகவே தனக்கு மரணம் என்பது இல்லை என்பது மகிஷியின் எண்ணம்.
 
ஐய்யப்பன் பூவுலகில் பம்பை நதிக்கரையில் குழந்தையாகப் பிறந்து பந்தள அரசனால் வளர்க்கப்பட்டு புலிப்பாலுக்காகக் காட்டுக்குச் சென்றபோது மகிஷியை சம்ஹரித்தார். அவள் பூத உடல் வளரவே அவள் மீது கல்லை போட்டு அவ்வளர்ச்சியை நிறுத்தினார்.
 
சபரிமலை யாத்திரையில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் கன்னி ஐயப்பன்மார் அழுதை நதியில் ஸ்நானம் செய்யும் போது கிடைக்கும் கல்லை இந்த இடத்தில் போடுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.
 
மகிஷியின் உடல் மீது ஐயப்பன் நடனம் செய்ததால் சாபம் நீங்கி மகிஷி ஒரு சுந்தரவதியாகக் தோன்றினாள். இவள் ஐயப்பனை மணக்க விரும்பினாள். ஐயப்பன் அவள் மீது கருணை கொண்டு உனக்கு இனி மஞ்சள் மாதா எனப் பெயர். நான் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முடிவு செய்திருப்பவன். இருந்தாலும் மகா உற்சவத்தின் போது இந்த கல்லிடம் குன்றில் என்று கல் விழாமல் இருக்கிறதோ அன்று உன்னை மணந்துக் கொள்கிறேன் என்றாராம். கல் விழாமல் இருப்பதும் இல்லை. சரங்குத்தியில் சரம் இல்லாமல் இருப்பதில்லை. ஆகவே ஐயப்பன் நித்திய பிரம்மசாரியாவே இருந்து வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – மகரம் | Magaram 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(17.12.2024)!

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் சிறப்புகள்..!

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – தனுசு | Dhanusu 2025 Rasipalan

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – விருச்சிகம் | Viruchigam 2025 Rasipalan

அடுத்த கட்டுரையில்
Show comments