Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவணி அவிட்டம் - உபநயனம் பூணூல் அணியும் சடங்கு

Webdunia
பூணூல் சடங்கை எட்டு வயது முதல் பதுனாறு வயதுற்குள் மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உபநயனம் என்பதில் இரண்டு இருக்கின்றன.


 
 
ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மீக உயர்நிலை அடைவதற்காகத் ஏற்பட்டது. இரண்டாவது, முக்கிய அம்சம் ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும். உபநயனம், ப்ரம்மோபதேசம் என்கிறோம்.
 
உபநயனம் இதில் நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் உபநயனம். உபநயனம் என்றால் துணைக்கண் என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 
 
கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவதுண்டு.
 
மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.
 
இரண்டாவதாக காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமகக் கொண்டது. எனவே சூருயனை வணங்குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும்.
 
காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.
 
காயத்ரீ தேவி மந்திரம்:
 
ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (19.01.2025)!

திருமணம் கைகூடவில்லையா? நாளை தேய்பிறை சஷ்டியில் இதையெல்லாம் செய்தால் போதும்,..!

இந்த ராசிக்காரர்களுக்கு வரவுக்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (18.01.2025)!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிவில் தைத்திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.01.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments