Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெய்வங்களுக்கு ஏற்ற வேண்டிய தீபங்களின் கணக்கு! – இதை பின்பற்றினால் வாழ்வில் சௌப்பாக்கியம் சேரும்!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (09:34 IST)
நலம் பல அருளும் தெய்வங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் பல சிறப்புகளை நமக்கு அளிக்கிறது. அவ்வாறாக ஏற்றப்படும் தீபங்கள் தெய்வங்களுக்கு ஏற்றப்படி எத்தனை முகமாக ஏற்ற வேண்டும் என்ற கணக்கை அறிந்து கொள்ளுங்கள்.



எந்த கோவிலுக்கு சென்றாலும் தெய்வங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நமது வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரு அம்சம் ஆகும். அவ்வாறு தீபம் ஏற்றும்போது பல விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்றுதான் தெய்வங்களுக்கு ஏற்ப எத்தனை முக தீபம் ஏற்ற வேண்டும் என்பது.

அனைத்து காரிய தொடக்கத்திற்கும் முழுமுதற் கடவுளாய் விளங்குபவர் விநாயகர். விநாயகருக்கு விளக்கேற்றி எந்த செயலையும் தொடங்குவது வெற்றிகளை வழங்க கூடியது. விநாயகருக்கு 7 தீபங்கள் ஏற்றி வழிபடுதல் சிறந்தது. ஆறுமுகனான முருக பெருமானுக்கு 6 தீபங்கள் ஏற்றுவது உகந்தது.

பெருமாள் மற்றும் பெருமாளின் அவதார தெய்வங்களுக்கு 5 தீபங்கள் ஏற்றலாம். நாக தெய்வங்களுக்கு 4 தீபங்கள் ஏற்ற வேண்டும். சிவபெருமானுக்கு 3 அல்லது 9 என ஒற்றைப்படையில் தீபங்கள் ஏற்ற வேண்டும். அம்மன் தெய்வங்களுக்கு 2 தீபங்களும், மகாலெட்சுமிக்கு 8 தீபங்களும் ஏற்றி வழிபடுதல் சிறப்பு.

தெய்வங்களுக்கு முன்னதாக காவல் நிற்கும் விலங்கின தெய்வங்களான நந்தி, மயில், பெருச்சாளி, கருடன் போன்றவற்றிற்கும் ஒரு விளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மீனம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – தனுசு!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments