வெற்றி வேண்டுமா? ச‌த்குரு வ‌ழிவகை - 3

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2013 (18:43 IST)
3. தேவை தெளிவு - குருட்டு நம்பிக்கை அல்ல!

சத்குரு:
FILE

ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.

உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.

உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?

வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

Show comments