Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது வீடு... புது பூசணி...

புது வீடு... புது பூசணி...
, திங்கள், 4 ஜூன் 2012 (13:54 IST)
கேள்வி: புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?

FILE
உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன.

நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது!

குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஏனெனில், பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும் கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான், அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.

பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும், புத்துணர்வும், சமநிலையும் அதிகரிக்கிறது.

இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!

சத்குரு.

Share this Story:

Follow Webdunia tamil