Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு ஏற்ற தொழில் கல்வியை பெற வேண்டும்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (12:31 IST)
மாணவிகள் பட்டப்படிப்புடன் நின்றுவிடாமல் வேலைக்கு தேவையான தொழில் கல்வியை பெற வேண்டும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி ஆனி கூறினார்.

சென்னை பிராட்வே சாலை‌யி‌ல் உ‌ள ்ள பாரதி மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.வி.கல்யாணி ஆனி தலைமை தாங்கி உரையா‌ற்‌றினா‌ர்.

அ‌ப்போது, இந்தியாவில் உயர்கல்வித்துறை பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆன்லைன் மூலமும், வீடியோ கான்பரன்சிங் மூலமும் கல்வி கற்கும் நிலை உள்ளது. இது நல்ல முன்னேற்றத்தை தந்துள்ளது. கல்வியில் நம்நாடு சிறந்து விளங்குகிறது. எந்த துறையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆசிரியர்கள்- மாணவர்கள் உறவு மாறவில்லை. அது சிறப்பாகவே உள்ளது.

மாணவிகளே பட்டம் பெற்றதுடன் நின்றுவிடாமல் வேலைவாய்ப்புக்கு ஏற்ற டிப்ளமோ அல்லது தொழில்கல்வியை நீங்கள் தங்கு தடையின்றி பெறவேண்டும்.

இந்த கல்லூரியில் படித்த நீங்கள் படிப்புடன் மட்டுமல்லாமல் பல்வேறு நல்ல திறமைகளை வளர்த்திருப்பீர்கள். நீங்கள் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் வாழ்ந்தால் அதுவே உங்களுக்கும் இந்த நாட்டிற்கும் முன்னேற்றத்தை அளிக்கும். ஆராய்ச்சியிலும் மாணவிகள் ஈடுபட வேண்டும்.

அப்துல்கலாம் கூறியது போல அறிவுசார் சமூகத்தை உருவாக்க நீங்கள் துணை நிற்பீர். அறிவுக்கு எல்லையே இல்லை. அறிவை வளர்த்துக்கொள்வதை நிறுத்தக்கூடாது எ‌ன்று கல்யாணி ஆனி பேசினார்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments