Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூங்கிலின் அழகே தனி!

Webdunia
புதன், 18 ஜனவரி 2012 (17:39 IST)
FILE
உங்கள் வீட்டிற்கு கலை நயம் மிக்க, சொகுசான ஃபர்னிச்சர் வாங்க வேண்டுமென்றால் மூங்கிலால் ஆன பொருட்களை வாங்கவும். மூங்கிலின் அழகே தனி. ஃபர்னிச்சரைத் தவிர புத்தகம், பழம், காய்கறி ஆகியவை வைக்கவும்.

இந்த வகை ஃபர்னிச்சர் பொருட்கள் மற்றும் கை வினைப் பொருட்கள் ரூ. 25ல் இருந்து 40-50 ஆயிரம் ரூபாய் வரை விலையில் கிடைக்கின்றன.

இந்த ஃபர்னிச்சர் மற்றும் இதர பொருட்களை உருவாக்குவதற்குத் தேவையான விசேடமூங்கில் அஸாம், திரிபுரா மற்றும் கோவா காடுகளில் இருந்து வருகிறது. இம்மாதிரிபொருட்களை உருவாக்க மூங்கிலைத் தேவையான வடிவம் பெற அதன் தோலைச் சீவி செதுக்குகிறார்கள். மூங்கில் குச்சிகளைக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாகப் பிணைத்து அழகான, ஈர்க்கக் கூடிய ஃபர்னிச்சர்களை உருவாக்குகின்றனர்.

இவை தயாரான உடன் இவற்றை நன்றாக தேய்த்து மெருகூட்டுகின்றனர். இந்த வகை ஃபர்னிச்சர்களை இரு வருடத்திற்கு ஒரு முறை பாலிஷ் செய்வதன் மூலம் குறைந்தது 25 வருடங்களுக்கு நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.

அது மட்டுமின்றி மூங்கிலால் ஆன பொருட்கள் எடை குறைவானவை என்பதால் வெகு எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல இயலும். இடத்தையும் அதிகம் அடைக்காது. அறையின் அமைப்பையும் எளிதில் மாற்றியமைக்கலாம்.

மூங்கிலின் இன்னொரு விசேடத் தன்மை: இதில் அலமாரி, சோஃபா போன்ற பெரிய ஃபர்னிச்சர் க iயும் செய்ய முடியும்; குழந்தைகளின் தள்ளு வண்டி, லேம்ப்-ஷேட், மெழுகுவத்தி வைக்கும் ஸ்டாண்ட் போன்ற சின்னப் பொருட்களையும் உருவாக்க முடியும். மூங்கிலால் உருவான திரை பல வீடுகளிலும், அலுவலகங்களிலும் அழகாகத் தொங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆகவே, மூங்கில் என்பது கை வினைத் திறனை அழகு பட வெளிப் படுத்தக் கூடிய ஒரு இயற்கைத் தந்த வழியாகும். ஆனால் மூங்கிலால் ஆன பொருட்களை உருவாக்க அதிக உழைப்பு, ஆர்வம், கற்பனைத் திறனுடன் கண்ணும் கருத்துமாய் செயல் படும் திறமையும் தேவைப்படுகிறது.

மூங்கிலால் ஆன பொருட்கள் நம் நாட்டுக் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் சான்றாகும். இதனால் தான் நம் நாட்டிற்கு வரும் வெளி நாட்டு பயணிகள் நம் நாட்டிற்கு வந்ததன் அடையாளமாய் இவற்றை தங்கள் தாய் நாட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

நாமும் இவற்றை வாங்கி இதன் மேன்மையை உணர்வதோடு, இந்தப் பொருட்களால் நம் வீடுகளை அலங்கரிக்கவும் செய்வோம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments