Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளாஸ்டிக் சர்ஜரியில் அரைசதமடித்த பெண்

பிளாஸ்டிக் சர்ஜரியில் அரைசதமடித்த பெண்
சீனாவில் பீஜிங் நகரைச் சேர்ந்த ஷி சன்பா என்ற பெண் சுமார் 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

பெண் மருத்துவரான இவர் கடந்த 1985ஆம் ஆண்டு தனது இன்னிங்சைத் தொடங்கி இருக்கிறார். அதாவது முதல் முறையாக அந்த ஆண்டு தனது முகச் சுருக்கத்தை நீக்குவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூக்கை அழகாக்கவும், தாடையை மாற்றி அமைப்பதற்காகவும், மார்பழகை கவர்ச்சிகரமாக மாற்றிக் கொள்ளவும், தொப்பையை அகற்றவும் என்று சுமார் 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.

எத்தனை முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று சரியான கணக்கே அவருக்கு நினைவில் இல்லை.

இப்போது அவருக்கு வயது 55 ஆகிறது. ஆனால் அவரைப் பார்க்கும் எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு அழகாகவும், இளமையாகவும் காட்சி அளிக்கிறார் அந்த பாட்டி.

இதில் முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டோமே... இவர் ஒரு மருத்துவர். அழகை மேம்படுத்துவதற்கான பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவர்.

அதச் சொல்லுங்க முதல்ல!!

Share this Story:

Follow Webdunia tamil