Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீயணைப்பு நிலையங்களுக்கு பெண் அதிகாரிகள்

தீயணைப்பு நிலையங்களுக்கு பெண் அதிகாரிகள்
, வியாழன், 17 செப்டம்பர் 2009 (12:25 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் முதல்முறையாக தீயணைப்பு நிலையங்களுக்கு பெண் அதிகாரிகள் தேர்தெடுக்கபபட்டுள்ளன‌ர். அவ‌ர்களு‌க்கான பயிற்சியை டி.ஜி.பி. நட்ராஜ் தொடங்கி வைத்தார்.

webdunia photo
WD
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்கு தீயணைப்பு படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தீயணைப்பு படையினர் மற்றும் மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கும் தீயணைப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இ‌ந்த ப‌யி‌ற்‌சி மைய‌த்‌தி‌ல், ‌தீயணை‌‌ப்பு ‌நிலைய‌ங்களு‌க்கு தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்ட 8 பெ‌ண் அ‌திகா‌ரிகளு‌க்கு ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

இது கு‌றி‌த்து தீயணைப்புத்துறை டி.ஜி.பி. நட்ராஜ் பேசுகை‌யி‌ல், நாட்டிலேயே முதல் முறையாக தீயணைப்பு நிலையங்களுக்கு பெண் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியுடன் சேர்த்து சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து சத்தியமங்கலம் காட்டுபகுதியில் மலை ஏறும் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது அதே போல தேசிய பாதுகாப்பு படையுடன் இணைந்து அங்குள்ள பயிற்சிகளும் பெண் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். தொழில் நுட்ப பயிற்சிகளும் அளிக்கப்படும்.

தீயணைப்பு படையினருக்கு உடல் வலிமை, மன வலிமை மிக முக்கியம். உடல் வலிமை தொடர்பாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்ட தலைமை தீயணைப்பு மையத்திலும் உடல் வலிமை, மன வலிமைகொண்ட 10 பேர் குழுவை `கமோண்டோ' படையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படையினர் மழை, வெள்ளம், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil