நடந்து முடிந்த 3 தொகுதிகள் தேர்தல் முடிவுகளால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கோபத்தில் உள்ளார் .
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதியன்று நடந்தது. அவரக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீதமும், தஞ்சாவூரில் 69.41 சதவீத வாக்குகளும் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி 1070, தஞ்சையில் 1534, திருப்பரங்குன்றத்தில் 4105 வாக்குகள் பெற்றது. மூன்று தொகுதிகளிலும் தேமுதிக டெபாசிட் காலியானது.
தேமுதிகவிற்கு இது போதாத காலம்தான். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்தின் பதிலுக்காக தமிழக கட்சிகள் காத்திருந்தன. திமுக தலைவர் கருணாநிதி கூட, பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக மக்கள் நலக்கூட்டணியுடன் விஜயகாந்த் தேர்தலை சந்தித்தார். இவரது அந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகினர். ஆனாலும் எதற்கும் அஞ்சாத விஜயகாந்த் தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் தேமுதிகவிற்கு பலத்த அடி விழுந்தது. விஜயகாந்த் கூட டெபாசிட் வாங்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே.
இந்த தேர்தல் தோல்விக்கு விஜயகாந்தின் முடிவு மட்டுமின்றி அவரது அணுமுறையும் காரணமாக அமைந்தது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் நடந்துகொண்ட விதம் மக்களை வெறுப்படையவைத்தது. மேலும் பிரேமலதாவின் தலையீடும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிட துவக்கத்தில் தேமுதிக அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. ஆனால் பிரேமலதாவின் பிடிவாதத்தால் இந்த தேர்தலை தேமுதிக சந்தித்தது. அதுமட்டுமின்றி 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதில் எப்படியோ வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேர்தல் செலவிற்காக விஜயகாந்த் தலா 25 லட்சம் வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தேர்த்ல் முடிவு தங்கள் கட்சிக்கு மீண்டும் புத்துணர்ச்சி தரும் என்று நம்பிக்கையில் இருந்த விஜயகாந்திற்கு இடியாகவே இறங்கியுள்ளது. இதனால் கடும் கோபத்தில் உள்ள விஜயகாந்த் தனது குடும்பத்தினரிடம் சீறி வருகிறாராம். நான் அப்போதே சொன்னேனே கேட்டீர்களா என்று கோபத்தை கொட்டி வருகிறார்.
இந்த துயரத்திலும் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் திருப்பரங்குன்றம் இடைத்தேதலில் விஜயகாந்தை வேட்பாளராக போட்டியிடவைக்கலாமா என்று தேமுதிகவினர் மத்தியில் பேசப்பட்டது. அவ்வாறு அவர் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோல்வியையே சந்தித்திருப்பார். என்ன கூடுதலாக சில ஆயிரம் ஓட்டுகளை பெற்றிருப்பார். இது தேமுதிகவை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் என்பது மட்டும் உண்மை.
ஆனாலும் இந்த தோல்வி அவருக்கு நிரந்தரமில்லை. மக்கள் மனம் வைத்தால் மீண்டும் அவர் அரசியல் களத்தில் ஜொலிக்கலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம் மாற்றங்களை!!!