ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (12:24 IST)
நாளுக்கொரு பேச்சு பேசுபவர் வைகோ என்று விஜயகாந்த் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்ட்டியளித்த வைகோ “அரசியலில் முட்டாள்தனமான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதைச் சொல்வதில் தவறில்லை. நான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது. 
 
என்னை சிறையில் வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் என் கிரிடிபிலிட்டி நொறுங்கி போய்விட்டது. நம்பகத்தன்மை தரைமட்டமாயிடுச்சு! விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை" என்று கூறினார்.
 
அவரின் கருத்து விஜயகாந்தையும், தேமுதிக தொண்டர்களை கோபத்திற்கு ஆளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் “நாள்தோறும் ஒரு கருத்தை கூறிவருபவர் வைகோ. அவர்தான் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தார். எனவே இதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments