Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா இன்று பொதுச் செயலாளராகிறார் - முதன்முறையாக பொதுவெளியில் பேசுகிறார்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (00:41 IST)
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று சனிக்கிழமை [31-12-2016] ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்க உள்ளார்.


 

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் முதன்முறையாக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு தீர்மானத்தை பெற்றுக் கொண்ட சசிகலா பதவி ஏற்க சம்மதம் தெரிவித்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்கிடையில், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு, அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சசிகலா, ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து, அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், இன்று வரும் 31ஆம் தேதி [சனிக்கிழமை] சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் பதவி ஏற்கிறார். விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments