Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசர்- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசர்- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (14:16 IST)
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற திருநாவுக்கரசர் தற்போது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தமிழக கட்சித் தலைவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வருகிறார்.


 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். ரஜினிகாந்த் தற்போது தனுஷ் வீட்டில் ஓய்வில் உள்ளார். அங்கு அவரை நேரில் சந்தித்தார் திருநாவுக்கரசர். பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், இந்த சந்திப்பு நட்பு ரீதியானது. ரஜினிக்கும்,எனக்கும் நல்ல நட்பு உள்ளது. மேலும் அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தேன் என்றார் அவர்.

ரஜினியுடனான திருநாவுக்கரசு சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரின் உயிரை பறிக்குமா 220 வாட்ஸ் மின்சாரம்? : நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள்