Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் பினாமி அரசை உருவாக்க பாஜக சதி : திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பினாமி அரசை உருவாக்க பாஜக சதி : திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பினாமி அரசை உருவாக்க பாஜக சதி : திருமாவளவன் குற்றச்சாட்டு
, சனி, 8 அக்டோபர் 2016 (15:26 IST)
தமிழக முதல்வர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் இருக்கும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழகத்தில் பினாமி அரரை அமைக்க பாஜக சதித் திட்டம் தீட்டுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: 
 
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் வேளையில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும் என்று, சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்திருப்பதை பார்க்கும் போது, அதிமுக ஆட்சியை கலைத்து, ஒரு பினாமி ஆட்சியை அமைக்க பாஜக முயற்சி செய்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
 
இத்தனை நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் முதல்வரை சந்திக்க மோடியோ, சுப்பிரமணியசாமியோ இதுவரை நேரில் வரவில்லை. ஆனால், இங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பாஜக கருதுவது அரசியல் ஆதாயம் தேட விரும்புவதைத்தான் காட்டுகிறது.
 
ராகுல்காந்தியின் வருகை ஒரு மனிதாபிமான அடிப்படையிலான ஒரு நிகழ்வாகத்தான் எனக்கு தெரிகிறது. ஆனால், அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வந்தேன் என்று கூறியிருப்பதன் மூலம், ஆட்சியை கலைக்க விடமால் நாங்கள் தடுப்போம் என்று கூறுவது போலவே இருக்கிறது” என்று அவர் கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்துக்கு தற்காலிக முதல்வர் தேவையில்லை: வைகோ ஆவேசம்!