ஜெயலலிதா உயிரை குடித்த பழச்சாறு! திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா?

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (21:22 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில் இந்த மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதாக கூறப்படுகிறது.



 


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவின் அதிகாரவர்க்கத்தில் ஒருவராக வலம் வந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இவருடைய தலையீடு அப்பல்லோவில் அதிகளவு இருந்தது என்பது சமீபத்தில் கைரேகை விஷயத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் வெளிவந்துள்ளது. ஜெயலலிதா டிசம்பர் முதல் வாரத்தில் நன்றாக உடல்நிலை தேறி வந்த நேரத்தில் அவர் வழக்கமாக அருந்தும் பழச்சாறு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எச்சரித்தும், நர்ஸ்கள் தடுத்தும் இந்த பழச்சாறு கொடுக்கப்பட்டதாகவும், இந்த பழச்சாறுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக இருந்ததாகவும் தற்போது செய்தி வெளிவந்துள்ளது. அந்த பழச்சாறு மட்டும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படாமல் இருந்தால் எந்த சிக்கலும் இருந்திருக்காது என அப்போதே மருத்துவர்கள் கூறியிருந்தனராம். இந்த தகவல் இப்போது பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த பழச்சாறு திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா? அல்லது தற்செயலாக கொடுக்கப்பட்டதா? என்பது விசாரணையில் தெரியவரும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராபிடோ ஓட்டுநர் கணக்கில் ரூ.331 கோடி பரிவர்த்தனை நடந்தது எப்படி: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி உண்மை..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு: சஸ்பென்ஸ் தரும் 'கண் திருஷ்டி' எமோஜி!

இஸ்லாமியர் வீட்டை இடித்த அரசு.. அவருக்கு வீடு கட்டி தருவேன் என இடம் கொடுத்த பக்கத்து வீட்டு இந்து மத நபர்..!

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!

அடுத்த கட்டுரையில்
Show comments