Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கில்லாடி சரத்குமார். விழிபிதுங்கும் வருமான வரித்துறையினர்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (04:48 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனிடம் இருந்து வெயிட்டான ஒரு தொகையை சரத்குமார் பெற்றுள்ளார் என்ற ரகசிய தகவலின்படிதான் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால் சரத்குமார் வீட்டை சல்லடை போட்டு தேடியும் எந்த ஒரு பெரிய தொகையும் சிக்கவில்லை. பணம் வாங்கியது உண்மை என்று உளவுத்துறை தெரிவித்தும் அந்த பணம் எங்கே சென்றது என்று தெரியாமல் விழிபிதுங்கியது வருமான வரித்துறை



 


இதன் அடுத்தகட்டமாகத்தான் சரத்குமார் மனைவி ராடன் அலுவலகத்தில் 11 மணி நேரம் ரெய்டு நடந்தது. அங்கு நடந்த ரெய்டில் வருமான வரி ஏய்ப்பு செய்ததை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த நிலையில், 'அந்த' பணம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை

இந்த நிலையில் தன்னை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுவேன் என்று சரத்குமார் நரம்பு புடைக்க ஆவேசமாக தனது தரப்பில் கூறி வருகின்றாராம்.  மொத்தத்தில் வருமான வரி சோதனை என்ற பெயரில் சரத்குமார் வீட்டிற்கு சென்று, அவர்கள் தங்கள் முகத்தில் கரியை பூசிக்கொண்டதுதான் மிச்சம் என்று சரத் தரப்பு சொல்லி சிரிக்கிறது. எங்கே போனது அந்த கோடிகள் என்று விழிபிதுங்கி வருமான வரித்துறையினர் நிற்பதாக தகவல்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments