Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் நபரை மிரட்டும் சசிகலா உறவினர்கள்...

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (13:20 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் நபரை சசிகலாவின் உறவினர்கள் மிரட்டிய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழகத்தின் முதல்வர் பதவியிலும் அமர்வார் எனத்தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனத் தெரிகிறது. 
 
அதில் பலர் தீபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தீபா பெயரில் பேரவைகள் உருவாக்கப்பட்டு அதில் ஆள் சேர்க்கும் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீபா பேனர், போஸ்டர் என களை கட்டுகிறது. சில இடங்களில் தீபா பெயரில் புதிய கட்சியையும் அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 17ம் தேதி தனது அரசியல் பயணம் தொடரும் என தீபாவும் அறித்துள்ளார்.
 
இந்நிலையில், சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்திலும், தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பகுதி தீபா பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ராஜசேகரன் என்பவர், தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர் அடித்து பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் வசிக்கும் சசிகலாவின் உறவினர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாக அவர் ஒரு பிரபல வார இதழுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்துள்ளார். ‘தீபாவிற்கு ஆள் சேர்க்கும் வேலையை விட்டு விடவேண்டும். இல்லையெனில் நடப்பதே வேறு’ என்கிற தொணியில் அவர்கள் தன்னை மிரட்டுவதாக அவர் கூறியுள்ளார். 
 
ஆனால், அவர்களின் மிரட்டலுக்கு தான் பயப்படப்போவதில்லை எனவும், வருகிற 17ம் தேதி, தீபாவின் தலமையில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments