Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தலைமைச் செயலகம் வரும் சசிகலா புஷ்பா - பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி?

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (13:56 IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா போட்டியிடுவதற்காக, வேட்பு மனுவை தாக்கல் செய்ய அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர இருப்பதால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜெயலலலிதா மறைந்து விட்ட நிலையில், அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான நபர் நாளை தேர்தெடுக்கப்படவுள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், ஜெ.வின் தோழியான சசிகலாவே அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், சசிகலாவே நாளை பொதுச் செயலராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை, சசிகலா மீது புகார் கூறி வந்தார் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. மேலும், அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்படக்கூடாது எனவும், அதற்கான தேர்தலில் சசிகலாவை எதிர்த்து நான் போட்டியிடுவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சசிகலா புஷ்பா இன்று அதிமுக தலைமை செயலகம் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார் என்றும், இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments