Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. எங்களிடம் கூறியது வேறு; சசிகலா நடந்து கொண்டது வேறு - ஓ.பி.எஸ் சீற்றம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (14:37 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நண்பகல், சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


 

 
அப்போது அவர் கூறியதாவது:
 
2011ம் ஆண்டு சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். ஆனால் 3 மாதம் கழித்து சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். அப்போது எங்களை அழைத்து, சசிகலா எனக்கு உதவியாளர் மட்டுமே, அவரையோ, அவரின் குடும்பத்தினரையே இனிமேல் அரசியலில் நுழைய அனுமதிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்தார். 
 
ஆனால் அவரின் மறைவிற்கு பின், சசிகலாவை பொதுச்செயலாளர் என்றார்கள். அதன் பின் முதல்வர் என்றார்கள். தற்போது தினகரன் துணைப் பொதுச்செயலாளர் என்கிறார்கள். ஜெ. வின் முடிவிற்கும், விருப்பத்திற்கும் எதிராகவே சசிகலா தரப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். யார் கையில் ஆட்சியும், கட்சியும் சென்று விடக்கூடாது என ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களின் கையில் இப்போது அதிமுக இருக்கிறது. இதனால், மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களை விரட்டும் வரை எங்களின் தர்ம யுத்தம் தொடரும்” என அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments