Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி? ஜெ. மரணம்? எதை சொல்லப் போகிறார் ஓ.பி.எஸ்? - பீதியில் சசிகலா தரப்பு

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (11:20 IST)
ஜெ.வின் பிறந்த நாள் விழாவான இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் பேசவுள்ள ஓ.பி.எஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதால் சசிகலா தரப்பு பீதியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் 69வது பிறந்த நாள் இன்று அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. ஆர்.கே.நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஓ.பி.எஸ் அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அங்கு, ஓ.பி.எஸ், தமிழக அரசியலை மாற்றியமைக்கக் கூடிய அறிவிப்புகளை வெளியிடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஆவடி எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 
 
எனவே, இன்று ஆர்.கே.நகரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பேசும் ஓ.பி.எஸ் மக்கள் முன்பு பல முக்கிய அறிவிப்புகளையோ அல்லது தகவல்களையோ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே, ஜெ.வின் சமாதியில் தியானம் இருந்து விட்டு செய்தியாளர்களிடம் சசிகலா தரப்பு பற்றி பரபரப்பு பேட்டியளித்த ஓ.பி.எஸ் வெறும் 10 சதவீதம்தான் நான் கூறியிருக்கிறேன் எனக் கூறியிருந்தார். எனவே, மீதி 90 சதவீதத்தையும் அவர் சொல்வாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
 
மேலும், தனிக்கட்சி தொடங்கும் திட்டமா? ஜெ.வின் மரணம் குறித்த தகவலா? என அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பையும், சசிகலா குடும்பத்தினரிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments