Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராசாத்தி அம்மாளுடன் சசிகலா தொடர்பு வைத்தது ஏன்? நத்தம் விஸ்வநாதன் வெளியிடும் திடுக் உண்மை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (06:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுப்பட்டதில் இருந்து பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஒரு அணியினர் இன்னொரு அணியினர் மீது குற்றச்சாட்டு கூறும்போது இதுவரை வெளிவராத பல விஷயங்கள் வெளிவருதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் திமுக ஆட்சியின்போது சசிகலா, ராஜாத்தி அம்மாள் அவர்களிடம் தொடர்பு வைத்து தங்களது மிடாஸ் சரக்குகளை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நத்தம் விஸ்வநாதன் மேலும் கூறியபோது, 'ஜெயலலிதா மரணத்தில் சாமானிய மக்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. திருநாவுக்கரசர், கருப்பசாமி பாண்டியன், கேபி முனுசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஜெயலலிதா விசுவாசிகளை சசிகலா குடும்பத்தினர் அவர் உயிருடன் இருக்கும் போதே ஓரங்கட்டினர்.

மிடாஸ் நிறுவனத்தை நடத்துவதில் ஜெயலலிதாவிற்கு விருப்பமில்லை. திமுக ஆட்சியில் ராசாத்தி அம்மாளை தொடர்பு கொண்டு, மிடாஸ் சரக்குகளை விற்றார் சசிகலா. இதுகுறித்து ஜெயலலிதாவே தெரிவித்திருந்தார்.

சசிகலாவிற்கு சில சொத்துகளை கொடுத்து வீட்டில் இருந்து வெளியேற்ற ஜெயலலிதா நினைத்து இருந்தார்' இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments