Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இணையும் நாஞ்சில் சம்பத்? - பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (13:12 IST)
மதிமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இனைந்து அரசியல் பணியாற்றிய நாஞ்சில் சம்பத் தற்போது திமுகவில் இணையப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத். அவரை அன்புடன் வரவேற்று, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியோடு, இன்னோவா காரும் பரிசளித்தார் ஜெயலலிதா.
 
ஆனால், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை பெய்து, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளான போது, தொலைக்காட்சிகளில் அவர் அளித்த கருத்துகள் அவருக்கு எதிராக திரும்பியது. அதனால் அவரின் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், சட்டசபை தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார்.
 
அதன்பின் ஜெ. உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகியே இருந்தார். ஜெ.மரணம் அடைந்த பின்பு ஏராளமான அதிமுக நிர்வாகிகள், போயஸ் கார்டன் சென்று சசிகலாவிற்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தனர். ஆனால், நாஞ்சில் சம்பத் அங்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசவில்லை.
 
இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகுகிறார் என நேற்று செய்திகள் வெளியானது. ஆனால் அதை அவரின் நட்பு வட்டாரங்கள் மறுத்தன.  அரசியல் கூட்டங்களை விட இலக்கிய கூட்டங்களே மேல் என அவர் கூறியதை தவறாக புரிந்து கொண்டனர் என விளக்கம் அளித்தனர்.
 
ஆனால், சசிகலாவின் தலைமைப் பொறுப்பை நாஞ்சில் சம்பத் விரும்ப வில்லை எனவும், விரைவில் அவர் திமுகவில் இணைய இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவரின் நட்பு வட்டாரங்கள் சிலரும் அதை உறுதிபடுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அவர் திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலினுடன் பேசியுள்ளதாகவும், அநேகமாக, வரும் ஜனவரியில் அவர் திமுக-வில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments