Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பாணியில் அதிரடி : கலெக்டரிடம் துப்பாக்கியை காட்டிய தேமுதிக நிர்வாகி

கலெக்டரிடம் துப்பாக்கியை காட்டிய தேமுதிக நிர்வாகி

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:26 IST)
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஒன்றில் கலெக்டரிடம் தேமுதிக பிரமுகர் துப்பாக்கியை காட்டிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.


 

 
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தற்போது தேமுதிகவில் இருக்கிறார். தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் சமீபத்தில் கூட்டப்பட்டது. அதில், தர்மபுரி கலெக்டர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் முல்லைவேந்தனும் கலந்து கொண்டார்.
 
அப்போது கலெக்டரிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்ட விவசாயிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், அரசு மானியத்தில் கொடுக்க வேண்டிய உரங்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாகவும், சரியான மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
 
அதோடு,  பாதுகாப்புக்காக தான் வைத்திருக்கும் துப்பாக்கியின் உரிமத்தை புதுப்பிக்க 8 மாதங்களாக போராடி வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் குறை கூறியவர், சட்டென்று தனது துப்பாக்கியை காட்டி ‘இதை கூட அரசு கவனிக்கவில்லை’ என்று கூறினார்.
 
சட்டென்று அவர் துப்பாக்கி எடுத்ததை பார்த்து  அங்கிருந்த பொதுமக்கள் மட்டுமில்லாமல் கலெக்டரும் ஆடிப்போனார்.  இதையடுத்து போலீசார் தற்போது அவரின் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments