Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவு குறித்து ஜோதிட கணிப்பு: தேர்தல் ஆணையம் தடை

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (06:10 IST)
தேர்தல் என்று வந்துவிட்டாலே தேர்தல் கணிப்புகளும் கூடவே வந்துவிடும். பல லட்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில் ஒருசில நூறு மக்களிடம் மட்டுமே கருத்துகேட்டு பல ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்து போவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது


 


இந்நிலையில் ஊடகங்கள் மட்டுமின்றி பிரபல ஜோதிடர்களும் தேர்தலில் பெற்று வருவது யார்? தோல்வி அடைவது யார்? என்று அவரவர்களின் ராசியை வைத்து கூறி விளம்பர நோக்கத்துடன் செயல்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை இருக்கும்போது ஜோதிட கணிப்புகளையும் வெளியிடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜோதிடர்கள் மூலம் நடத்தும் தேர்தல் முடிவுகள் சட்டவிதிகளுக்கு முரணானது என தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments