Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நட்சத்திர பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவு

திமுக நட்சத்திர பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவு

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (08:15 IST)
மதுரையை சேர்ந்த திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக திடீர் மரணமடந்தார்.


 

 
அவருக்கு வயது 78. கடந்த 40 ஆண்டுகளாக, திமுகவின் முன்னணி பேச்சாளராக திகழ்ந்து வந்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனல் பறக்கும் பேச்சால் திமுக தொண்டர்களை கட்டிப்போட்டவர் இவர். 
 
கட்சியின் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2001ம் ஆண்டு, திமுகவிலிருந்து விலகி, அதிமுகவிற்கு சென்றார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து,  மீண்டும் திமுகவிற்கே திரும்பினார். பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வந்தார்.


 

 
இந்நிலையில், கல்லீரல் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அவர் கடந்த சில வருடங்களாக கட்சிப் பணியில் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார். மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
 
அவருக்கு 2 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரது உடல் ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

அடுத்த கட்டுரையில்
Show comments