Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.எல்.எ-களுக்கு அவசர அழைப்பு: ஏதேனும் அரசியல் டிவிஸ்ட் இருக்குமா??

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (10:44 IST)
திமுக எம்.எல்.எ-க்கள் அனைவரும் சென்னைக்கு உடனடியாக வர வேண்டும் என கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.


 
 
இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.எ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து திமுக எம்.எல்.ர்-க்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசியலில் பரப்பரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று மாலை கூட்டப்படும் திமுக எம்.எல்.எ-க்கள் கூட்டம் அரசியலில் ஏதேனும் மாற்று முடிவுகளை கொண்டுவருமா என் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விடிக்கப்பட்டுள்ளதால், அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிமுகவில் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடர்வாரா இல்லை முதல்வர் பன்னீர் செல்வம் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் ஆளுநரின் முடிவை தமிழகமே எதிர்நோக்கி உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்தை தங்களது பெரும்பான்மையை நிறுபிக்க வேண்டி சட்டசபையை கூட்டினால் திமுகவின் 89 எம்.எல்.எ-க்கள் மற்றும் 8 கூட்டணி எம்.எல்.எ-க்கள் ஒட்டு போட வேண்டியது வரும். எனவே இதை குறித்து முடிவு செய்ய எம்.எல்.எ-க்கள் கூட்டப்படலாம் என செய்திகள் வெளியாகிறது.
 
இது ஒரு பக்கமிறுக்க கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் ஸ்டாலினை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். எனவே, இதை குறித்து ஏதேனும் ஆலோசனை நடத்தவும் எம்.எல்.எ-க்கள் கூட்டம் கூட்டப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகின்றன.
 
இவை அனைத்திற்கும் இன்று மாலை கூட்டப்படும் கூட்டத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments